Friday, May 7, 2010

என் முதல் குழந்தைக்கு...

ஒன்பது வருடங்களுக்கு முன் என் முதல் குழந்தையை கருதரித்திருந்த போது எழுதியது இந்தக் கவிதை.... சமீபத்தில் என் பெண்ணுக்கு படித்துக் காட்டினேன், ஒரே சந்தோஷம் அவளுக்கு. அவள் முகத்தில் பெருமை,ஆச்சரியம் நெகிழ்ச்சி என ஏகப்பட்ட கலப்பட உணர்வுகளை பார்க்கையில் என் நாலு வரிகள் செய்த மாற்றங்களை நினைத்து எனக்கே மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஆகவே என் முதல் பதிப்பாக என் குழைந்தைக்கான என் வரிகளை போடலாம் என்ற ஆவலுடன் இதோ இங்கே.....

அன்புடன் அம்மா....

வளர்பிறையும் தேய் பிறையும்
வானத்து நிலவுக்கு உண்டு - ஆனால்
என் வயிற்றுக்குள் உதித்த நிலவுக்கு
என்றும் வளர் பிறைதான்...

வண்ணத் தாரகைகளுக்கு நடுவில்
வான் நிலவு
எண்ணத் தாரகைகளுக்கு நடுவில்
என் நிலவு

மரபுக் கவிதையாய் வளர்த்து
புதுக் கவிதையாய் உனை பெற்றெடுப்பேன்
இது என்னுள் வளரும் உயிர் கவிதைக்கு
என் உயிர் எழுதும் கவிதை

இந்த கவிதை அறங்கேறும் நாளுக்காக
காத்திருக்கும் உன்
அன்பு அம்மா.....

6 comments:

vidhas said...

Good one Hema!!!

SOS said...

Thnak u so much vidhya for yr luvly response.

Unknown said...

உணர்ந்து எழுதிய வரிகள், கருவிற்கு உயிர் கொடுக்கும் உன்னதமான படைப்பு வாழ்த்துகள்

SOS said...

Thanks balan.

சிவா said...

///
வண்ணத் தாரகைகளுக்கு நடுவில்
வான் நிலவு
எண்ணத் தாரகைகளுக்கு நடுவில்
என் நிலவு///

மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வரிகள்!

SOS said...

பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி திரு.சிவா.