Friday, April 6, 2012

தலைப்புக்கேற்ற கவிதைகள் - கையற்ற பொம்மைகள்...














கால்களற்றவன்
கைகள் ஏந்தி வருகையில்
நின்றிருந்த பேருந்து
நகரும் வரை
சில்லரை தேடுவதாய்
பாவனை செய்தன
நீட்சிகள் மட்டுமே பெற்றிருந்த
கையற்ற பொம்மைகள்...

4 comments:

dafodil's valley said...

நீட்சிகள் என்றால் என்ன? அதன் அர்த்தத்தை சற்று விளக்க முடியுமா?

கால்கள் அற்ற ஒர் பிச்சைகாரனுக்கு அங்கு நிற்போர் காசு கொடுக்க பிடிக்காமல் பாவனை செய்கின்றனர் கையிருந்தும் கையில்லாத பொம்மைகளாய் என நச்சென்று கொடுத்திருக்கிறாய். மிக நன்றாக இருக்கிறது கவிதை!

சிவஹரி said...

கொடுக்க மனம் இல்லாத தர்மகர்த்தாக்களின் நிலை இப்படித்தான் பாவனையிலே காலத்தை கழித்து, கழிவிரக்கம் மட்டும் கண்களின் வழியே காட்டி கழண்டு கொள்கின்றார்கள்.

இல்லையெனில் இல்லை என்று சொல்ல மனம் எப்போது தான் சம்மதிக்குமோ அறிகிலேன்.

பகிர்ந்தமைக்கு நன்றி

SOS said...

Thank you vasu. Neetchikal na jus an extension.

SOS said...

Thank you sivahari.