Thursday, October 4, 2012

நீயும்???... நானும்...


அனுமதி கேட்டு காதல் செய்தவனும் நீ
அனுமதியின்றி காயம் செய்தவனும் நீ

மிட்டாய் தொலைத்த குழந்தையாக
அழுது நிற்கிறேன்
உனை எதற்காகத் தொலைத்தேன்
என்பது புரியாமலேயே..

தீராத தனிமையின் மை கொண்டு
எழுதத் துவங்குகிறேன் உனக்கான
ஒரு கவிதையை...

எழுத்தின் சுவடுகளாக
உன்னால் கத்தரிக்கப் பட்ட
என் சிறகுகளே வந்து விழுகின்றன...

விசாரிப்புகள் ஏதும் அற்ற
உனது தீர்ப்பை கூறும் முன்னமே
நீ ஒடித்திருந்த
பேனா முட்களின் முனைகளில்
நொறுங்கிவிட்டிருந்தேன் நான்..

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நெகிழ வைக்கிறது வரிகள்...

SOS said...

மிக்க நன்றி தனபாலன்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_6.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

சத்ரியன் said...

சோகம் ததும்பும் கவிதை.

செய்தாலி said...

வரிகளில் வலி ததும்புகிறது

SOS said...

//திண்டுக்கல் தனபாலன் said...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_6.html) சென்று பார்க்கவும்...

நன்றி...//

பார்த்து பதிந்தும்விட்டேன் தனபாலன். மிக நன்றி.

SOS said...

வருகைக்கும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி சத்திரியன் மற்றும் செய்தாலி அவர்களே.

dafodil's valley said...

கூறாய் வந்து கிழித்த கத்திக்கு இதமாய் இறகுகளால் புரிய வைக்கும் முயற்சி. வலி என்றாலும் கவிதையாய் இருப்பதனால் ரசிக்க முடிகிறது.

SOS said...

நன்றி வசு...