Tuesday, February 12, 2013

ஒரு கவிதை...



ஒவ்வொரு முறையும் எதையாவது
கொடுத்துவிட்டே செல்கிறாய்
ஒரு மிட்டாய் ஒரு மயிலிறகு
ஒரு புத்தகம் ஒரு புன்னகை
குறைந்தபட்சம் ஒரு முத்தமாவது...

இதற்கு ஈடாக என்னால்
எதைத் திருப்பித் தர முடியும்?

கட்டுப்பாடான தழுவல்???
மண் திண்ணும் மெய்???
உச்சகட்டப் பொய்
என் உயிர்???

ஒத்திகையின்றி இயல்பாக
எதைத் தருவது?

அதிகபட்சம்

சொற்களுக்கு முன்னும் பின்னும்
உனக்கு மட்டுமே புரியும் மௌனத்தை
புதைத்து வைத்துள்ள
ஒரு கவிதையைத் தவிர!!!...

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஒத்திகையின்றி இயல்பாக
எதைத் தருவது?

அதிகபட்சம்

சொற்களுக்கு முன்னும் பின்னும்
உனக்கு மட்டுமே புரியும் மௌனத்தை
புதைத்து வைத்துள்ள
ஒரு கவிதையைத் தவிர!!!...//

மெளனத்தைப்புதைத்து வைத்துள்ள இந்தக்கவிதையும் அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.

SOS said...

நன்றி VGK சார்.