Monday, February 23, 2015

எனக்கு நீ...

எல்லாருக்கும் ஒரு நட்பு இருக்கிறது
எனக்கு நீ இருக்கிறாய்
எல்லாருக்கும் ஒரு காதல் இருக்கிறது
எனக்கு நீ இருக்கிறாய்
எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கிறது
எனக்கு நீ இருக்கிறாய்
எல்லாருக்கும் ஒரு ரகசியம் இருக்கிறது
எனக்கு நீ இருக்கிறாய்
எல்லாருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது
எனக்கு நீ இருக்கிறாய்
எல்லருக்கும் ஏதோ ஒன்று
எதுவாகவோ இருக்கிறது
என் எல்லாமாகவும்
எனக்கு நீ இருக்கிறாய்.

4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

"என் எல்லாமாகவும்
எனக்கு நீ இருக்கிறாய்"

என்ற முடிவு வரிகள் மிகவும் ரஸிக்கும்படியாக உள்ளன.

பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

VGK

தனிமரம் said...

நம்பிக்கை என்ற கையாக இருக்கும் போல! கவிதை அருமை.

yathavan nambi said...

அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (29/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

SOS said...

வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி வை.கோ சார் மற்றும் தனிமரம்.