அடர் மழைக்குப் பின்னான
தூவானப் பொழுதொன்றில்
ஒற்றைக் கோட்டுப்பாதையில்
துணை தேடிய பறவை ஒன்றின்
அத்துவானக் குரலில்
வழிந்தொழுகும் விரகத்தை
கைகளில் ஏந்தியபடி
நனைந்த புல் நுனிகள்
பாதச்சூட்டை உணர்ந்துருக
இதழ் வெடிப்பில் கசிகின்ற
என் வரிகளுக்கு
கைக்கெட்டா தூரத்தில்
மெட்டமைக்கிறாய் நீ
அடிப்படையில் நான் ஒரு சந்தோஷ விரும்பி. விளையாட்டு புத்தியும் இலகுவான மனப்பான்மையும் அதிகம். எதிலும் இயல்பையும் யதார்த்தத்தையும் விரும்புபவள். என்னின் சில எண்ணச் சிதறல்கள் இங்கே. கல்லின் மேல் விழும் உளியாய் உங்களின் கருத்துகள் என்னை செதுக்கவும் விதைமேல் விழும் மழையாய் உங்களின் பாராட்டுகள் எனை துளிர்க்கவும் உதவட்டும். எனது பக்கங்களை ஸ்பரிசித்த பார்வைகளுக்கு எனது நன்றிகள்.