Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

Wednesday, November 21, 2018

தொடர் அறிமுகம்..


தினமணி இணையத்தள வாசகர்களுக்காக, ‘எட்டாம் ஸ்வரங்கள்’ என்ற தலைப்பில் இத்தொடரை எழுதுகிறேன். பொதுவாக இதிகாசங்கள், இலக்கியம், அரசியல் என இன்ன பிற பிரிவுகளில் பேசப்படாத பெண் பாத்திரங்களைக் குறித்து ஒரு சிறு அலசல் தொடர் இது. படித்தவற்றையும், அறிந்தவற்றையும், கேட்டவற்றையும் கலந்து, தேவைக்கு மட்டும் சில உணர்வுப்பூர்வமான புனைவுகளைச் சேர்த்து எழுதப்படும் தொடர் இது. இத்தொடரை எழுதவதற்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்த தோழி உமா அவர்களுக்கும், வாய்பளித்த தினமணி ஆசிரியருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எழுத்துலகில் அடி எடுத்து வைத்திருக்கும் என் போன்றவர்களுக்கு இது மிகப் பெரும் வாய்ப்பு. தினமணி தளத்திலும் இங்கும் கட்டுரைகளை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும். வாசகர்களின் கருத்துக்களும் பாராட்டுகளும் எனை மேலும் வளர்த்துக் கொள்ள உதவும் என்று நம்புகிறேன். நன்றி.

Monday, May 3, 2010

ஒரு எளிய அறிமுகம்...

நான் ஒரு அன்பான மனைவி, 9 வயது மகளுக்கும் 5 வயது மகனுக்குமான பாசமுள்ள தாய். 15 வருடங்களுக்கு முன் கவிதை என்ற பெயரில் தோன்றியதை எல்லாம் கிறுக்க ஆரம்பித்ததவள். இன்றும் அதையேதான் செய்கிறேன் என்பது வேறு விஷயம். படித்தது முதுகலை ஆங்கில இலக்கியம் என்றாலும், தாய் மொழி தமிழ் என்பதாலும் அடிப்படையில் ஒரு தமிழச்சி என்பதாலும் பள்ளிப் படிபனைத்தும் தமிழ் வழி கல்வி என்பதாலும் சரளமாக படிப்பதற்கும் எழுதுவதற்கும் வருவது தமிழ் தான். அதற்காக தமிழ் புலமை அதிகம் என்றெல்லாம் தவறான கருத்துக்கு வந்துவிட வேண்டாம். எனக்கு தோன்றிய எண்ணங்களை என் அறிவுக்கு எட்டிய வார்த்தைகளில் எளிமையாக பகிர்வதே நோக்கம்.

நான் என் எண்ணங்களை எழுத்தாக்குவதற்குண்டான அடிப்படை தகுதியை வளர்துக்கொண்டது படிக்கும் பழக்கம் இருந்ததால்தான். படிக்கும் ஆர்வத்தை என்னுள் விதைத்து அதை ஊக்குவிது வளர்த்துவிட்ட என் தாய்க்கு என் அனந்த கோடி நமஸ்காரங்கள்.



என் தாய் ஒரு நல்ல (நல்ல என்பதை விட தீவிரமான) புத்தக பிரியர். படிக்கும் ஆர்வம் எனக்கும் என் சகோதரிக்கும் வந்தது என் அம்மாவிடமிருந்துதான். ஆதலால் இந்த வலைதளத்தை என் தாய்க்கு சமர்பிக்கிறேன்.




என் ஒவ்வொரு படைப்பையும் படித்துக் காட்டும்பொழுது பாராட்டி (துளியும் இத் துறையில் சம்பந்தமில்லாவிட்டாலும் பொறுமையுடன் கேட்டு) அதை புத்தக வடிவிலோ (அ) பத்திரிக்கையிலோ போட வேண்டும் என இன்னமும் என்னை தூண்டிக்கொண்டிருக்கும்












என் அன்புக் கணவருக்கு எனது LIFE TIME நன்றிகள்.


ஒரு கூட்டுக்குள்ளேயே சுற்றி சுற்றி வட்டமிட்டுக் கொண்டு, கூட்டுப் பறவையாய் இருந்த என்னை, பிற உலகளாவிய விஷயங்களிலும் கவனம் செலுத்த வைத்து, தரமான புத்தகங்களைப் பரிசளித்தும், அறிமுகப் படுத்தியும் என் படிக்கும் ஆர்வத்தை விரிவாக்கி, மேலும் தங்களது விமர்சனங்கள் மூலம் உளியாய் எனைச் செதுக்கிக் கொண்டிருக்கும் எங்கள் குடும்ப நண்பர் திரு. ராஜா செந்தூர் பாண்டியன் அவர்களுக்கும் என் உடன் பிறவா சகோதரர் திரு. வேல்சாமி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த வலைதளம் ஆரம்பிக்க முக்கியத் தூண்டுகோலாக இருந்த எங்கள் நண்பர் தாமஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.