தினமணி இணையத்தள வாசகர்களுக்காக, ‘எட்டாம் ஸ்வரங்கள்’ என்ற தலைப்பில் இத்தொடரை எழுதுகிறேன். பொதுவாக இதிகாசங்கள், இலக்கியம், அரசியல் என இன்ன பிற பிரிவுகளில் பேசப்படாத பெண் பாத்திரங்களைக் குறித்து ஒரு சிறு அலசல் தொடர் இது. படித்தவற்றையும், அறிந்தவற்றையும், கேட்டவற்றையும் கலந்து, தேவைக்கு மட்டும் சில உணர்வுப்பூர்வமான புனைவுகளைச் சேர்த்து எழுதப்படும் தொடர் இது.
இத்தொடரை எழுதவதற்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்த தோழி உமா அவர்களுக்கும், வாய்பளித்த தினமணி ஆசிரியருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எழுத்துலகில் அடி எடுத்து வைத்திருக்கும் என் போன்றவர்களுக்கு இது மிகப் பெரும் வாய்ப்பு. தினமணி தளத்திலும் இங்கும் கட்டுரைகளை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும். வாசகர்களின் கருத்துக்களும் பாராட்டுகளும் எனை மேலும் வளர்த்துக் கொள்ள உதவும் என்று நம்புகிறேன்.
நன்றி.