
ஒரு இளவேணிற் காலத்தே
புல் நுனிகளில் பனித்துளி போல
வந்து அமர்ந்தது உன் பிரியம்...
ஞாயிறின் முதல் கிரணம்
ஓடையில் விழுந்தது போல
தவழ்ந்தது உன் பிரியம்...
வண்ணத்துப் பூச்சியின்
மென் உறிஞ்சுதலாய்
தொடங்கியது உன் பிரியம்...
காற்றில் மகரந்த வாசனை போல்
உள் கலந்தது உன் பிரியம்...
முளையின் பற்றுதல் போல்
வேர்பிடித்து ஊடுருவியது
உன் பிரியம்...
கொழுவில் கொடி போலப்
பற்றிப் படர்ந்தது உன் பிரியம்...
அடை மழைக் காலத்தின்
அடித்துப் பெய்யும் மழையெனவும்
கட்டறுந்து வீசும் காற்றாகவும்
கடும் கோடையின்
சுட்டெரிக்கும் கதிரெனவும்
வரளச் செய்யும் வெப்பமாயும்
மாறிவிட்டிருந்தது...
பருவங்களைப் போல
இப்போது உன் பிரியங்களும்
5 comments:
வித்தியாசமான சிந்தனை வரிகள் ரசிக்க வைத்தது....
//பருவங்களைப் போல
இப்போது உன் பிரியங்களும்//
அழகான படத்துடன் அருமையான வரிகளுடன் அசத்தலான கவிதை.
பாராட்டுக்கள்.
இளவேனிற் காலத்து இனிய வசந்த கீதம் படிப்பவரின் மனதில் முதலில் இனிமையினையும் கடையிலேக்கத்தினையும் வரவழைக்கின்றதோ என்று எண்ணிடத் தோன்றுகின்றது.
நன்றி அக்கா
உற்சாகமூட்டும் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் பல, தனபாலன், கோபாலக்ருஷ்ணன் ஐயா மற்றும் சிவா தம்பி..
பிரியங்களின் பருவங்கள்
ம்ம்ம் ..அழகிய உள்ளுணர்வு தோழி
Post a Comment