ஓடும் நீராகத்தானே இருந்தேன்
மலராய் எப்படிப் பூத்தாய்?!
கடும் பாறையாகத்தானே இருந்தேன்
கொடியாய் எப்படி படர்ந்தாய்?!
சுடும் நெருப்பாகத்தானே இருந்தேன்
நீராய் எப்படி அணைத்தாய்?!
நிலவு மட்டும் சுமந்த வானமாக இருந்தேன்
நட்சத்திரங்களாகி நிரம்பி வழிகிறாய்
மறக்கப்பட வேண்டும் என்பதாலேயே
மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறாய்...
2 comments:
அழகிய ஓவியம் அம்சமாய் பொருந்தியிருக்கிறது கவிதைக்கு.
இக்கவிதை மறக்கபடாமல் மனதில் எப்போதும் இருக்கும் உனது நினைவை போல...
நன்றி வசு..
Post a Comment