Monday, December 31, 2012

வழி வழியாய் வரும் கதைகள்...



என்ன இருக்கிறது படிக்கவும் பார்வையிடவும்
வெள்ளைத்தாள் முழுவதும்
சிவப்பை மட்டுமே சிந்திக் கொண்டிருக்கும்
கருப்பு எழுத்துக்கள்..

பாட்டி தன் தாயிடம் கதை கேட்டாள்
புராணங்களும் இதிகாசங்களும்

பாட்டியிடம் என் தாய் கதை கேட்டாள்
கம்பராமாயணமும் கட்டபொம்பனும்

என் தாயிடம் நான் கேட்டேன்
திருக்குறளும் திருவிளையாடலும்

என் மகள் என்னிடம் கேட்டாள்
சிங்க ராஜாவையும் சிண்ட்ரெல்லாவையும்

தன் மகளுக்கு அவள் என்ன சொல்வாள்
வன்முறையையும் வன்புனர்வையுமா????..

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//தன் மகளுக்கு அவள் என்ன சொல்வாள்
வன்முறையையும் வன்புனர்வையுமா????..//

வேண்டாங்க,
தயவுசெய்து
வேண்டாங்க
வேதனை தரும்
இந்த முடிவு ... ப்ளீஸ்.

மற்றபடி கவிதை நல்லாவே எழுதியிருக்கீங்க.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

VGK

SOS said...

நீங்களும் நானும் மட்டுமல்ல அனைவரும் விரும்புவது வேண்டாங்க இதெல்லாம் எனும் சொல்லைத்தான் ஐயா.. ஆனால் நடப்பவை படிப்பவை கேட்பவை எல்லாம் இச் சமுதாயத்தில் இதுவாகவே இருக்கும் போது மனம் நொந்து எழுதினேன்..

இறைவன் க்ருபையால் இப் புத்தாண்டு முதலாவது வன்முறை வன்புனர்வற்ற சமுதாயம் மலரட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி VGK சார்.