Sunday, February 3, 2013

நீயும்.. நீ அற்ற கோடிகளும்...



அடுப்படியில் அவியல் சமைப்பது முதல்
அம்மா வீட்டுக்கு போவது வரை

என் மூக்கு கண்ணாடி உடைஞ்சிருச்சு
குளியலரைக் குழாயில் தண்ணீர் வரலை

இந்தமாத அரிசி என்ன ரகம் வாங்கறது
பூஜைக்கு இந்தமுறை பொடி சாம்பிராணியா
கம்ப்யூட்டர் சாம்பிராணியா?

துணிக்கடையில் நிற்கையில்
எந்த நிறத்தில் எந்த விதத்தில் எடுத்து
நான் உடுத்தினால் உனக்குப் பிடிக்கும்?

உன் முகம் நோக்கி பதிலுக்கு
நிற்பது முதல்

என் உருண்டை முகத்துக்கு
நீளப் பொட்டிடாமல்
உனக்குப் பிடிக்கும் என
வட்டப் பொட்டிடுவது வரை

ஆதியும் அந்தமுமாய்
உனக்காகவே, உனைக் கேட்டே
உன் பொருட்டே உனை ஆதாரமாக்கியே
சுழன்றுவிட்ட எனக்கு

உனைப்பிரிந்து நான் வருந்தக் கிடைக்கும்
கோடிகளின் பூஜ்ஜியம் கூட
நீயின்றி எண்ணத் தெரியாதே!!!..

அதற்காகவேணும் பிரியாதிரு...

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சீக்கிரம் வந்துடுங்க... முடியலே...

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அழகான அருமையான படைப்பு. சூப்பர் ;)

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உனைப்பிரிந்து நான் வருந்தக் கிடைக்கும் கோடிகளின் பூஜ்ஜியம் கூட நீயின்றி எண்ணத் தெரியாதே!!!..
அதற்காகவேணும் பிரியாதிரு...//

மிகவும் ரஸித்த வரிகல். ;)))))

SOS said...

//திண்டுக்கல் தனபாலன் said...
சீக்கிரம் வந்துடுங்க... முடியலே...//

ம்ம்.....:-(

SOS said...

//வை.கோபாலகிருஷ்ணன் said...
மிகவும் அழகான அருமையான படைப்பு. சூப்பர் ;)

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.//

நன்றி சார்...

SOS said...

////உனைப்பிரிந்து நான் வருந்தக் கிடைக்கும் கோடிகளின் பூஜ்ஜியம் கூட நீயின்றி எண்ணத் தெரியாதே!!!..
அதற்காகவேணும் பிரியாதிரு...//

மிகவும் ரஸித்த வரிகள். ;)))))//

ரசிப்புக்கும் வருகைக்கும் நன்றி VGK சார். கோடிகள் குவித்திடுமோ குதூகலம் எனும் கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் கவிதை எழுதும் முத்தமிழ் மன்றத் திரிக்காக சென்ற வருடம் எழுதி வைத்தது. வேறு ஒரு கவிதையை அங்கு பதிந்துவிட்டேன். இதை எங்குமே பதியவில்லை. ஆதலாம் இங்கு பதிவிட்டேன். தங்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி...