Monday, October 26, 2015

பிரசுரமான கவிதை - தினமணி -”மது ஒழிப்பு”

தினமணி மின் நாளிதழில் “ மது ஒழிப்பு” என்ற தலைப்பின் கீழ் எனது கவிதை.
பிரசுரித்தமைக்கு நன்றி தினமணி மற்றும் திருமதி. உமா சக்தி.

மது ஒழிப்பு

மது மது மது
அன்பைக் கெடுக்குமது
மரியாதைக் குலைக்குமது
குடும்பம் தவிர்க்குமது
உயர்வைக் தடுக்குமது
மனதைக் கலைக்குமது
பண்பைக் தொலைக்குமது

குளிர்ந்த நிலையில் கசந்த திரவம்
உடனே செய்யுமே உபத்திரவம்
மதுவில் தொடங்கி
மாதில் தொடர்ந்து
வாழ்வைக் குடித்து
மரணத்தில் முடிக்கும்
மதுவுக்கு
விலக்கும் வேண்டாம்
ஒழிப்பும் வேண்டாம்
முற்றிலும் செய்வோம் மது அழிப்பு
அரசு செய்யட்டும்
அமைச்சர் செய்யட்டும்
ஆண்டி செய்யட்டும்
குப்பம் சுப்பன் பெருமாள் பேராண்டி
யாரோ தொடங்கட்டும்
என்ற எண்ணம் தவிர்த்து
தனிமதன் தன் ஒழுக்கத்திலிருந்து
துவங்கட்டும்

மது ஒழிப்பும் மது அழிப்பும்…

4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகச்சிறப்பான ஆக்கம். சமுதாய சிந்தனையுள்ள அழகான கருத்துக்கள். வரிக்கு வரி மெட்டுக்கள் இனிமையாக உள்ளன. ’தினமணி’யில் வெளியானது கேட்க மிக்க மகிழ்ச்சி. மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

கீழிருந்து ஐந்தாம் வரியின் ஆரம்ப முதல் வார்த்தை [யரோ தொடங்கட்டும்] ’யாரோ’ என இருக்க வேண்டுமோ? அப்படியாயின் அதை மாற்றி விடுங்கோ, ப்ளீஸ்.

SOS said...

தங்கள் கருத்துகளையும் வாழ்த்தையும் கண்டு மிக மகிழ்ச்சி வை.கோ சார். சுட்டியமைக்கு நன்றி மாற்றிவிட்டேன். டைப் செய்யும் போது நேர்ந்த தவறாயிருக்கும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//SOS said...
தங்கள் கருத்துகளையும் வாழ்த்தையும் கண்டு மிக மகிழ்ச்சி வை.கோ சார். சுட்டியமைக்கு நன்றி மாற்றிவிட்டேன். டைப் செய்யும் போது நேர்ந்த தவறாயிருக்கும்.//

பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான உடனடி பதிலுக்கு மிக்க நன்றி, மேடம்.