
என் கவிதைகள்
உற்பத்தி செய்யப்பட்டவை அல்ல
உன் நினைவுத் தாக்கத்தால்
உருவாக்கப்பட்டவை...
நிஜம் அந்நியமான
பொய்களைக் கொண்டிருந்தாலும்
உனைப்பற்றியதால்
இனிமையாகத்தான் இருக்கிறது...
உன் மனக்கண்ணின் உணர்வுகள்
என் அகக் கண்ணின் கனவுகளாக,
வந்து உதிர்ந்த வார்த்தைகளை
உனையன்றி பிற கண்கள்
ஸ்பரிசிக்கும் வேளை...
கை தட்டல்களையும் மீறி
வலிக்கத்தான் செய்கிறது
எழுதிய விரல்களுடன்
உன் நினைவு
தாங்கி நிற்கும் இதயமும்...
பழைய காகித கற்றைகளிலிருந்து
உனக்கான பக்கங்களில்
எனது வாக்கியங்கள்
நாம் பழகிய நாட்களின்
ஞாபகச் சின்னமாய்...
மறுபடியும்(சு)வாசிக்கிறேன்
"வலிகள் தாங்கிய உன் வாசத்தை"...
4 comments:
Seekirama cinemavil innoru 'thamarai'yei edir parkalam.
My hearty wishes...
Thanks for yr words. Ana idhu romba over a theriala unakku.
ஞாபகங்கள் சில வலியானவையாக இருந்தாலும் அந்த ஞாபகத்தில் உணரும் பொழுதுகள் வாசம் மிக்கைவைதான், அழகிய கவிதைஹேமா தொடருங்கள்
நன்றி பாலன்.
Post a Comment