நான்கு புறமும் கைத் தட்டல்கள்
எட்டுத் திக்கிலும் பாராட்டு மழைகள்
ஒளி வெள்ளத்தின் நடுவே
கர ஒலிகளும் போட்டியிட
மேடை தொட்டவனுக்கு முதல் பரிசு
அகில இந்திய அளவில்...
பெருக்கெடுத்த வெள்ளச் சுழலில்
சிக்கிச் சுழன்ற மூதாட்டியை
மிகச் சிறந்த கோணத்தில்
ஒளிப்பதிவு செய்ததற்காய்...
நிஜத்தை பதிய வைக்கும்
நிழல் வேலையில்
மனிதம் மறந்த மனங்கள்?..
மரத்துத்தான் போனது
உரத்த சப்தத்தின் எதிரொலியாய்
மௌனித்த என் மனதும்!.....
Friday, May 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
wow...fascinating space you have...very interesting ...
Do drop in at my blog sometime.
Thaks Jay... sure will keep in touch.
கவிதை வரிகள் மிகவும் அற்புதமாக உள்ளது சகோதரி!
மிக நன்றி சகோதரரே...
வித்தியாசமான கருவாக்கம் இக்கவிதை!
தொடரட்டும் உங்கள் சமூகநல பார்வை!
Thanks for visiting and for your nice comments shinisi. do visit as and when u can.
Post a Comment