Tuesday, September 7, 2010

நீரில் இடும் கோலங்கள்....

இனிய நட்புகளுக்கு

இந்தக் கவிதை திரு. ஒட்டக்கூத்தன் அவர்கள் நடத்திய போட்டியில் பரிசு வென்றிருக்கிறது என்பதை மிக மகிழ்சியுடன் தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

வாய்பளித்து பரிசும் தந்தமைக்கு மிக நன்றி நண்பர் ஒட்டக்கூத்தரே...

கீழ்க்காணும் வலைதளத்தில் விபரம் காணலாம்..
otakoothan.blogspot.com and Re: ஓர் இனிய கவிதை போட்டி.

காற்றின் ஏதோ ஒரு அளாவளில்

மலர்ந்த மொட்டுகள் போல

நிலவின் ஏதோ ஒரு கிரணம் தொட்டு

உயர்ந்தெழுந்த அலைகள் போல

மழையின் ஏதோ ஒரு துளி உள் வாங்கி

முத்தெடுத்த சிப்பி போல

உன்னின் எந்த அலை என் மேகம்

நனைத்துச் சென்றது?...

கருக்கள் தாங்கி நிற்கும் கருவரைக் காட்டிலும்

உன் ஒற்றைக் காதல் மட்டும்

சுமந்து நிற்கும் என் இதயம் தனித்துவமானது...

இரவில் விழுந்த நிழலாய்

நீரில் இட்ட கோலமாய்

தடயங்களற்ற தடம் பதித்துச்

சென்றது உன் காதல்...

2 comments:

Unknown said...

மிக நுண்ணியமான உணர்வுகளை வார்த்தைகளில் அடக்கிய விதம் உங்கள் கவிதையில் அருமை ஹேமா மேலும் தொடருங்கள்

SOS said...

மிகவும் நன்றி பாலன்...