வளைந்து கொடுப்பது விட்டுக் கொடுப்பது
இரண்டும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தின்
இயலாமை மேல் பூசப்பட்ட
பண்புப் பூச்சு...
மனம் சாராத நம் வளைதலை விட
நிஜம் உணர்த்தி பிறரின் நிமிர்த்தலே மேலானது
வாழ்க்கைப் புத்தகத்தில் பிரித்த பக்கங்களைவிட
படிக்கப் படாத பக்கங்களே அதிகம்
அடுத்தவர் நிர்வாணம் கலையாகும் வேளையில்
சுய நிர்வாணம் கேவலமாகிறது..
சுய அழுக்குப் போக்குவதை விட
அழுக்கு மறைக்கும் ஒப்பனைக் கூட்டலே
கலாச்சாரமாகிவிட்டது...
இங்கே தற்கொலை தியாகமாகிறது
கொலை வீரமாகிறது...
நாடகம் அறிந்து நடிப்பு தெரிந்து
நம்முள் " நான்" மட்டும்
புரியாமல் புதிராய் தொடர்கிறது
சுவைக்க முடியாத சுகங்கள் தந்த
சுமையுடன் மீதி நாடகமும்....
Wednesday, September 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment