Saturday, September 1, 2012

ஊர்மிளை...














மரவுறி தரித்து ராமன் முன்னேற
பத்தினித் தெய்வமென சீதையும்
பின் தொடர்ந்தாள்..

அண்ணன் திருவடி தொழும் சேவகனாய்
உடன் சென்றான் தமையனவன்

மீளாத் துயர் கொண்டிருந்தாலும்
சத்ரியக் குலமகளாய்
சுமித்திரையும் விடை கொடுத்தாள்...

மாளாத் துயரடைந்த தசரதனும்
சொல் காக்க வழியணுப்பினான்..

அவரவர் கடன் அவரவர் கடமை
அவரவர்கள் சிரத்தையாய் நிரூபிக்க..

தமக்கை மணம்புரிந்ததனால்
தானும் ம(ன)ணம் புரிந்து கொண்டு
இலவச இணைப்பாகவே இலக்குவனனை
சேர்ந்த போதும் சோரவில்லை அவள் மனது..

மாளாக் காதலிலும் அன்பிலும் கொண்டவனைக்
அவள் கண்டிருக்கையிலே
தாளாத பிரிவொன்று தானாகவே வருமென்று
பேதை அவள் கனவினிலும் நினையவில்லை...

ஈரேழு புவனத்திலும் சிறந்தவன் நீயென்று
இனி என் அன்னை நீ தந்தை நீ
கொண்டவன் நீ உற்றவன் நீ சொந்தம் நீ பந்தம் நீ
உயிர் மூச்சு நீ என் சகலமும் நீ என நம்பிக்
கைப் பிடித்தவன் தன் துணை மறந்து
இல்லறம் துறந்து துற வரமாய் வேண்டி
ஈரேழு வருடங்கள் உனைப் பாரேன் என
தமையனுடன் சென்ற போதும்...

தாயாய் தந்தையாய் காதலனாய்
கணவனாய் காவலனாய்
கடைசி வரை உனைப் பிரியேன்
என அக்னி வலம் வந்தவனை
மனக் கடலில் மூழ்கச் செய்ய
அவன் கண்ணீராய் வெளியேறிய போதும்
துயருரவில்லை அவள் இதயம்

பிரிவு நெருப்பில் தன் ஆற்றாமை எரித்து
புடம் போட்ட தங்கமென ஒளிர்ந்தனள்
மணாளனின் மானசீகக் கட்டளையால்
அரண்மனையில் அடங்கிப் போன
அடிமை இவள்
நந்தவனத்தின் நடுவே சிறையிருந்த
மகரந்தம் தவிர்த்த பெண் பூ இவள்

கண்களிலும் காண்பதிலும் கனவினிலும்
கணவனையேக் கண்டு
தனைக் கரைத்து தன் நாமம் மறந்து
ஒரு போதும் தன் நிலை மாறா
வைராக்கிய யோகி இவள்..

உடன் பிறந்தவள் கணவனுடன் சென்றுவிட
ஊடாகப் பிறந்த மற்றவளும்
தன்னவனுக்குத் துணையிருக்க

தன் துணையை வழியனுப்பி
துணையற்ற தனிமரமாய் தானாகி
ரகுவம்சத்தின் களங்கம் கழுவிய
தியாகச் சுடர் இவள்..

காதலை காமத்தை தாபத்தை
விரகத்தை மோகத்தை இளமையை
அடக்கிய வைராக்கிய வீரி இவள்..

வஞ்சிக்கப் பட்டு ஏமாற்றப் பட்டு
மறக்கப்பட்டவளாயினும்
சிறிதும் அங்கீகாரம் கிடைக்கப் பெறாத
கற்புக்கரசியாம் தியாகச் சுடராம்
ஊர்மிளையை இங்காவது சிதைக்காமல்
சிந்திப்போம் சிறப்பிக்க....

சீதை! நளாயினி! கண்ணகி! சாவித்திரி!
மாதவி! அகலிகை! வாசுகி!...
கொண்டவரின் அருகிருந்து
உறவாலே உடலாலே உடனிருந்து
கற்பிதம் ஓம்பியவர்கள் கற்புக்கரசிகள் எனில்..

கொண்டவன் உடன் உறையாமல்
உளத்தால் மட்டும் உணர்ந்திருந்து
கற்பை சிறந்தோம்பிய இவள்
கற்புக்கு பேரரசி...


11 comments:

கதம்ப உணர்வுகள் said...

அன்பின் ஹேமா,

அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

திரு வை.கோபாலகிருஷ்ணன் சார் எனக்கு தந்த விருதினை தங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி எனக்கு.

அன்பு வாழ்த்துகள்பா..

http://manjusampath.blogspot.com/2012/09/2.html

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஊர்மிளை கற்புக்குப் பேரரசி !

அழகாக
அற்புதமாக
அசத்தலாக

மிக விளக்கமாகச் சொல்லியுள்ளீர்கள்.

வெகு மிகச்சிறப்பான ஆக்கம்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

சிவஹரி said...

மஞ்சுபாஷிணி அக்கா அவர்களால் எனக்கு வழங்கப்பட்ட லிப்ஸ்டர் விருதினை தங்களுக்கு பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கின்றேன்..

விருது குறித்து மேலும் பார்க்க: http://sivahari.blogspot.com/2012/09/blog-post_14.html

SOS said...

அன்பு மஞ்சு அக்கா வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள். இந்த வலைப்பூ ஆரம்பித்து நான் பெறும் முதல் விருது அதுவும் அன்பான உங்களிடமிருந்து. மிக மிக மகிழ்வுடன் ஏற்கிறேன். மிக்க நன்றி அக்கா...

SOS said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கோபாலக்ருஷணன் ஐயா..

SOS said...

அடடா! விருது மழை எனை நனைக்கிறதே. நன்றி சிவஹரி. விரைவில் இரு விருதுகளையும் வலைபக்கத்தில் பதிகிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பகிர்வு... பாராட்டுக்கள்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
Follower ஆகி விட்டேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_15.html) சென்று பார்க்கவும்...

நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

SOS said...

வருகைக்கும் பதிவிற்கும் வலைச்சர சுட்டியை பதிந்ததற்கும் என் நன்றிகள் பல தனபாலன் சகோ...

இராஜராஜேஸ்வரி said...

அவரவர் கடன் அவரவர் கடமை
அவரவர்கள் சிரத்தையாய் நிரூபிக்க..



நந்தவனத்தின் நடுவே சிறையிருந்த
மகரந்தம் தவிர்த்த பெண் பூ இவள்

ஊர்மிளையை உணர்த்தும் உன்னத கவிதை ! அருமை.. பாராட்டுக்கள்.

SOS said...

//இராஜராஜேஸ்வரி said...
அவரவர் கடன் அவரவர் கடமை
அவரவர்கள் சிரத்தையாய் நிரூபிக்க..



நந்தவனத்தின் நடுவே சிறையிருந்த
மகரந்தம் தவிர்த்த பெண் பூ இவள்

ஊர்மிளையை உணர்த்தும் உன்னத கவிதை ! அருமை.. பாராட்டுக்கள்.//


நன்றி இராஜேஸ்வரி...

sury siva said...


ஊர்மிளை அவளது தாபத்தை
தியாகத்தை, தனித்துவத்தை
ஒரு காவியமாக
எழுதியிருக்கிறார்
இந்தி மொழியின்
மஹா கவி என போற்றப்பட்ட‌
மைதிலி சரண் குப்த அவர்கள்.

அவர்களது காவியம்
ஊர்மிளா கா விரஹ கான்
காதுகளில் ... அல்ல‌
இத்யத்தை நெருடும்
சோக கீதம்.

சம்பூர்ண ராமாயணத்தில் அவள் ஒரு
சஹானா.


சுப்பு ரத்தினம்.