Tuesday, September 18, 2012

நம் சிநேகம்...



















ஒரு கோப்பை காப்பியுடனாக
ஆரம்பித்தது நம் சிநேகம்...

சிறு தூரலென சிதறி
இலை மேல் தேங்கிய
துளியாகச் சறுக்கி
உயிரென வேரில் நுழைந்தாய்...

காமம் க்ரோதம் வன்மம் பயம்
பகட்டு வேஷம் பொறாமை எதுவுமற்று
மகிழ்ச்சி மட்டுமே கொண்டிருக்கும்
குழந்தை போல் இதயத்தை மாற்றினாய்...

வாழ்க்கையை அந்நிமிடத்திற்காகவே
வாழவைத்தாய்
என் ஆசைக்கும் மீசை
முளைக்கச் செய்தாய்...

உடைந்த வளையல் துண்டுகளிலும்
சாக்லேட் பேப்பரிலும்
புத்தக அட்டைகளிலும்
மின்னி மறையும் உன் பிம்பத்துடன்

அருந்திக் கொண்டிருக்கிறேன்
உனக்காக நிறைத்த கோப்பையை
வேறு எவருடனும் பகிரமுடியாமல்....

மனதின் தவிப்பையும்
சேர்த்து விழுங்கிக் கொண்டு...

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஏங்க வைக்கிறது வரிகள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

உள்ளத்தின் உணர்வுகளை ஒளிக்காமல் சொல்லும் அழகான கவிதை.....

நம் சிநேகம்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

சிவஹரி said...

சிறு தூலாய் சிதறிய சிநேகத்தின் ஆரம்பம் உயிரின் வேர் வரை நுழையுமென்பது திண்ணம்.

சிநேகம் வருவதைப் பொறுத்தே மனிதனின் வாழ்க்கை முறையும் அமையும் என்பதனைச் சொல்லிடும் வரிகள்..

நன்றி அக்கா

SOS said...

நன்றி தனபாலன், வை.கோ ஐயா மற்றும் சிவா...

dafodil's valley said...

அழகிய வரிகளில் ஆழமான நட்பை சிறு வரிகளின் மூலம் விரிவாகவே விளக்கிவிட்ட கவிதை அபாரம்.

SOS said...

அட! அட!! எப்படி?.. இப்படி!!! வசு. பின்னூட்டமே அசத்துது போ... நன்றி.