தீராத பிரார்த்தனை தாங்கிய
காகிதத்துண்டு ஒன்று எட்டியபோது
கடவுள்
மொழி புரியாதவராய்
இருந்தார்...
தீராத
பிரார்த்தனையின்
குரல்
ஒன்று கதறிய போது
கடவுள்
காதுகளற்றவராய் இருந்தார்
தீராத
பிரார்த்தனையின்
கண்ணீர்த்
துளி ஒன்று
சொட்டிய
போது கடவுள்
கண்களற்றவராய்
இருந்தார்
தீராத
பிரார்த்தனையின்
வலி
ஒன்று அறைந்த போது
கடவுள்
உணர்வுகளற்றாவராய் இருந்தார்
தீராத
பிரார்த்தனை ஒன்று
தன்
உருச்சிதைந்து
அழுகலின்
நாற்றத்துடன் பரவியபோது
கடவுள்
உணர்ச்சியற்றவராய் இருந்தார்
இப்படித்
தீராத பிரார்த்தனைகள்
சுமந்து
பால்வெளியில்
அலைந்து
கொண்டிருக்கும்
காகிதத் துண்டுகள் எத்தனையோ?..
அவை
என்றேனும் ஒருநாள்
பொழியக்
கூடும் அமில மழையாக
கடவுளின்
துகள்களையும் கரைத்துக் கொண்டு...
12 comments:
வித்தியாசமான சிந்தனை வரிகள்...
நன்றி...
நன்றி தனபாலன் உங்களது உடனடி பாராட்டுகளுக்கும் பதிவிற்கும்.
//இப்படித் தீராத பிரார்த்தனைகள்
சுமந்து பால்வெளியில்
அலைந்து கொண்டிருக்கும்
காகிதத் துண்டுகள் எத்தனையோ?..//
மாறுபட்ட சிந்தனைகளில் ஓர் கவிதை, நல்லாவே இருக்கு.
நன்றி ஐயா..
வலைச்சரத்திற்குச் சென்று தங்கள் கருத்துக்களைப் தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.
இணைப்பு இதோ:
http://blogintamil.blogspot.in/search?updated-max=2012-10-03T11:38:00%2B05:30
அன்புடன்
வை.கோபாலகிருஷ்ணன்
[கோபு] [VGK]
படித்து மகிழ்ந்து பதிவும் இட்டுவிட்டேன் VGK சார். அறிய வைத்தமைக்கு மிக்க நன்றி.
SOS said...
படித்து மகிழ்ந்து பதிவும் இட்டுவிட்டேன் VGK சார். அறிய வைத்தமைக்கு மிக்க நன்றி.//
Madam,
தாங்கள் சென்று கருத்தளித்துள்ளது வலைச்சரத்திலுள்ள வேறு ஒரு பதிவுக்கு.
நான் விரும்புவது என்னைப்பற்றி மட்டும் மஞ்சு அவர்கள் 02.10.2012 அன்று வெளியிட்டுள்ள பதிவுக்கு.
மீண்டும் போய் கருத்திட வேண்டுகிறேன். சரியான இணைப்பு இதோ:
http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html
அன்புடன் VGK
ரெம்ப அருமையான கவிதை தோழி
//
Madam,
தாங்கள் சென்று கருத்தளித்துள்ளது வலைச்சரத்திலுள்ள வேறு ஒரு பதிவுக்கு.
நான் விரும்புவது என்னைப்பற்றி மட்டும் மஞ்சு அவர்கள் 02.10.2012 அன்று வெளியிட்டுள்ள பதிவுக்கு.
மீண்டும் போய் கருத்திட வேண்டுகிறேன். சரியான இணைப்பு இதோ:
http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html
அன்புடன் VGK//
மீண்டும் சென்று பதிவிட்டு விட்டேன் VGK சார். நன்றி.
//செய்தாலி said...
ரெம்ப அருமையான கவிதை தோழி//
மிக்க நன்றி செய்தாலி..
தீராத ப்ரார்த்தனைகளை கடவுள் என்றும் தீர்க்க முடியாதவரல்லவே...தாங்களே தீர்த்து கொள்வார்கள் என விட்டிருக்கலாம். அமில மழைக்கு ஒதுங்கினால் விசாரிக்ககூடும் அவரை :)
ஒதுங்கும் போது உன்னைக் கூப்பிடச் சொல்லிவிடுகிறேன் வசு.. விசாரிச்சு எனக்கும் கொஞ்சம் சொல்லிடு என்ன?... பின்னூட்டத்திற்கு நன்றிம்மா தங்கச்சி...
Post a Comment