Wednesday, October 17, 2012

யுத்தம்...


அறை எங்கும் சிதறிக் கிடந்தன
நாம் ஒருவரை ஒருவர்
பேச்சுக்களால் குதறிக் கொட்டிய
வார்த்தைகள்..

அவற்றின் ஒவ்வொறு அங்கமும் கீறப்பட்டு
ரத்தம் உறைந்தும் உறையாமலும்
விடைத்துக் கொண்டிருந்தன...

இனி வெட்டுவதற்கோ சிந்துவதற்கோ
வார்த்தைகள் இல்லாது
தீர்ந்திருந்த போழ்தில்...

உதட்டில் ஒரு சிகரெட்டைப்
பொருத்திக் கொண்டு
தலையை உதறி வெளியில் சென்றாய் நீ...

துடைப்பமும் முறமும் கொண்டு
அள்ள ஆரம்பித்திருந்தேன் நான்...

நிசப்தமான நம் அறை
அடுத்த யுத்தத்தைப்
பேசிக் கொண்டிருந்தது
நான்கு சுவர்களுடன் மௌனமாக...

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அதானே வாழ்க்கை...

ஆனால் இந்தளவிற்கு கூடாது...!

/// உதட்டில் ஒரு சிகரெட்டைப்
பொருத்திக் கொண்டு
தலையை உதறி வெளியில் சென்றாய் நீ... ///

இந்தப் பழக்கமே மாறவில்லை... மாற்றவில்லை... என்றால் தினமும் இப்படித்தான்...

SOS said...

ஹா! ஹா! ஹா!.. சரிதான்.

நல்ல வேளை எங்கவீட்டுக்காரருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லை.

நன்றி பின்னூட்டத்திற்கு.