Wednesday, December 26, 2012

விளிம்பு நீரென...


வெளிச்சத்தில் மறைந்திருக்கும் இருளைப் போல

எனதான அத்தனையிலும் நீயே
நிறைந்திருக்கிறாய்...

உன் ஸ்பரிசம் தீண்டும் பொழுது
சிறகுகள் அமிழ்த்தி அமரும்
பருந்தைப் போல
ஒரு கனத்த மௌனம் 
மனதை அழுத்துகிறது...

நமது ஒவ்வொரு சந்திப்பின் 
முடிவும்

எதிர்கொள்ளமுடியாத ஒரு
உண்மையாய்... ஊமையாய்...
நான் திரும்பும் வழி நெடுகிலும்
தொடர்கிறது 
எனை உறுத்தவாரே...

குழந்தையின் புரிந்து கொள்ளமுடியாத
புன்னகையும் அழுகையும் போல
உன் மீதான காதலும் கசப்பும்
விளிம்பு நீரென என் கண்களில்

சொட்டியும் விடாமல் வற்றியும் விடாமல்...

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//குழந்தையின் புரிந்து கொள்ளமுடியாத
புன்னகையும் அழுகையும் போல
உன் மீதான காதலும் கசப்பும்
விளிம்பு நீரென என் கண்களில்

சொட்டியும் விடாமல் வற்றியும் விடாமல்...//

மிகவும் அழகான வரிகள்.
நல்ல கவிதை.
பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றிகள்.

[சூடான சுவையான அடை சாப்பிட என் பதிவுப்பக்கம் வாங்கோ]

அன்புடன்
VGK

SOS said...

வாழ்த்துக்கும் சுவையான பாராட்டுகளுக்கும் நன்றி VGK சார். இதோ வருகிறேன் அடை சாப்பிட..