Wednesday, January 30, 2013

என் அப்பாவின் அன்பு..


அரைக்கிலோ இனிப்பும்
அரைக்கிலோ காரமும்
சாமிக்கு கதம்பமும் எங்களுக்கு
மல்லிகையுமாக
அப்பா வீட்டுக்குள் நுழைந்தாரென்றால்
முதல் தேதி சம்பள நாள்...

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்தாலும்
அப்பா வாங்கிவரும் என்னமாச்சும்காக
கண்கள் சொருக அரைத் தூக்கத்தில்
காத்திருந்து கட்டிக் கொண்டது 
ஒரு காலம்...

நாள் கிழமை பண்டிகையில்
கண்ணாடி வளையல்களும்
பாடர் வைத்த பாவாடை தாவணியும்
தவனை முறையில் வந்தாலும்
சித்தாடை கட்டிய சிண்ட்ரெல்லாவாய்
சிரிப்புடன் சுற்றி சுற்றி வந்தது
பொற்காலம்..

இன்றும் கிடைக்கிறது
அதைவிடவும் அதிகமாகவும் உசத்தியாகவும்
இலையின் ஓரம் இனிப்புத் துண்டுடன்
சுருட்டப்பட்டிருக்கும் என் அப்பாவின்
அன்பைத்தவிர...

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எதிர்ப்பார்த்து கிடைத்து விட்டால் அந்த சந்தோசமே தனி தான்...

எதிர்ப்பார்க்காமல் கிடைப்பது... தவறு... எப்போதும் இருப்பது தான் அன்பு...

dafodil's valley said...

மிக சரி...

நாட்கள் கடந்தாலும் நினைவுகள் நம்மை தாலாட்டும் அதே அன்புடன்....

கடந்த காலத்தை நினைவுகூற சிறந்த வழி இக்கவிதை.

SOS said...

//திண்டுக்கல் தனபாலன் said...
எதிர்ப்பார்த்து கிடைத்து விட்டால் அந்த சந்தோசமே தனி தான்...

எதிர்ப்பார்க்காமல் கிடைப்பது... தவறு... எப்போதும் இருப்பது தான் அன்பு...//

மிகச் சரியே தனபாலன் அவர்களே. உடனடி பின்னூட்டத்திற்கு மிக நன்றி.

SOS said...

//மிக சரி...

நாட்கள் கடந்தாலும் நினைவுகள் நம்மை தாலாட்டும் அதே அன்புடன்....

கடந்த காலத்தை நினைவுகூற சிறந்த வழி இக்கவிதை.//

ஆமாம் வசு. நினைவுகள் தரும் சுகமே அலாதிதான்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இன்றும் கிடைக்கிறது
அதைவிடவும் அதிகமாகவும் உசத்தியாகவும்

இலையின் ஓரம் இனிப்புத் துண்டுடன்
சுருட்டப்பட்டிருக்கும் என் அப்பாவின்
அன்பைத்தவிர...//

உள்ள உணர்வுகளின் வலிகளை மிக மென்மையாக மேன்மையாக அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள்.

SOS said...

நன்றி VGK சார்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

உங்கள் அப்பா போலவே நானும் அன்புடன் அழைக்கின்றேன்.

நேரம் கிடைத்தால் வருகை தாருங்கள்.

http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html

பிரியமுள்ள
VGK