Saturday, December 20, 2014
Monday, December 15, 2014
உனக்கும் எனக்கும் நடுவே....
உனக்கும் எனக்கும் நடுவே
நிறைய கொஞ்சல்கள்
இருந்தன
முரண்பட்ட கெஞ்சல்கள்
இருந்தன
கேலிகள் இருந்தன
நிறைய கவிதைகள்
இருந்தன
கூடவே சின்ன சின்னதாய்
சில பொய்களும்
மத்தாப்புச் சிதறலாய்
சில சிரிப்புகளும்...
இப்போது
உனக்கும் எனக்கும் நடுவே
பொதுவான மௌனம்
காற்றின் இடைவெளியை
நிரப்பியபடி ஊஞ்சலாடிக்
கொண்டிருக்கிறது...
உன் பக்கம் வருகையில்
என் முகத்தைப் பார்த்தபடியும்
என் பக்கம் திரும்புகையில்
உன் முகத்தைப் பார்த்தபடியும்....
நிறைய கொஞ்சல்கள்
இருந்தன
முரண்பட்ட கெஞ்சல்கள்
இருந்தன
கேலிகள் இருந்தன
நிறைய கவிதைகள்
இருந்தன
கூடவே சின்ன சின்னதாய்
சில பொய்களும்
மத்தாப்புச் சிதறலாய்
சில சிரிப்புகளும்...
இப்போது
உனக்கும் எனக்கும் நடுவே
பொதுவான மௌனம்
காற்றின் இடைவெளியை
நிரப்பியபடி ஊஞ்சலாடிக்
கொண்டிருக்கிறது...
உன் பக்கம் வருகையில்
என் முகத்தைப் பார்த்தபடியும்
என் பக்கம் திரும்புகையில்
உன் முகத்தைப் பார்த்தபடியும்....
Saturday, December 13, 2014
Thursday, November 27, 2014
Thursday, November 13, 2014
Saturday, September 13, 2014
Sunday, September 7, 2014
Thursday, August 28, 2014
கதை கதையாம்...
நானும் என் குழந்தைகளுக்கு
கதை சொல்ல ஆசைப்படுகிறேன்
ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம் ..................
.........................................
இதற்கு மேல் ஒரு போதும் தொடர்ந்ததில்லை..
இதைப்போலவே நீயும்
உன் குழந்தைகளுக்கு
தேவதைக் கதைகள் சொல்லி இருக்கலாம்
இதழோரத்துப் புன்னகையோடும்
இமைகள் நனைக்கும் நீர்த்துளியோடும்....
Tuesday, July 1, 2014
Monday, June 30, 2014
Thursday, May 15, 2014
Wednesday, May 14, 2014
குறுங்கவிதைகள்...,
பட்டாம்பூச்சிகள்
கொள்ளை அழகுதான்
ஆனாலும்
நீ
பார்க்கையில்
என்
இமை துடித்திடும்
அழகுக்கு
நிகராக இல்லை!!!...
***************
நீயே
ஒப்புக்கொள்ளும்
உன்னின்
ஆக்கச் சிறந்த
அழகான
பொய்
நான்
தான்...
****************
காத்திருந்த
வேளைதனில்
வேர்த்த்ருந்த
என் புருவங்களை
வருடிச்
சென்றது
உன்
குளிர்ந்த பார்வை..
***************
உன்னைச்
சொல்லாத
உன்னிடம்
சொல்லாத
எதுவும்
கவிதை இல்லை
வெறும்
சொற்களே...
Tuesday, May 6, 2014
Wednesday, April 23, 2014
Monday, April 21, 2014
Monday, April 7, 2014
எப்படி..?!!!..

ஓடும் நீராகத்தானே இருந்தேன்
மலராய் எப்படிப் பூத்தாய்?!
கடும் பாறையாகத்தானே இருந்தேன்
கொடியாய் எப்படி படர்ந்தாய்?!
சுடும் நெருப்பாகத்தானே இருந்தேன்
நீராய் எப்படி அணைத்தாய்?!
நிலவு மட்டும் சுமந்த வானமாக இருந்தேன்
நட்சத்திரங்களாகி நிரம்பி வழிகிறாய்
மறக்கப்பட வேண்டும் என்பதாலேயே
மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறாய்...
Sunday, January 26, 2014
திரும்ப....
எனதானெதென்று
ப்ரத்தியேகமானதொன்று
பத்திரமாய்த்தான்
வைத்திருந்தேன்..
மிகப்
ப்ரயத்தனத்துடன்
கெஞ்சி
கொஞ்சியே
எடுத்தாண்டுவிட்டாய்..
திருப்புதலுக்கானவோ
திரும்புதலுக்கானவோ
எந்த
முகாந்திரமும் இன்றி...
கலங்கித்
தவிக்கிறேன்
ஊமையாய்
சுட்டெரிக்கும்
கடுங்கோடை
வெயிலாயினும்
உரத்துப்
பெய்யும் கன மழையாயினும்
உன்
நினைவைத் தடுக்க முடியவில்லை
தயை
கூர்ந்து
எடுத்துச்
சென்ற எனதான
க(ற்)ருப்புக்
குடையை
திரும்பக்
கொடுத்துவிடேன்...
(நி)சப்தம்...
யாருமற்ற
என் அறையில்
இரவின்
தனிமையுடன்
இமைகளை
இணைத்த
நள்ளிரவு
நேரம்...
எங்கிருந்தோ
க்ரக்..
க்ரக்.. க்ரக்..
மெல்லிய
க்ரீச்சொலி
கேட்க
ஆரம்பித்தது...
திடுக்கென
இமை பிரித்து
பயப்பார்வை
படரவிட்டு
விளக்கொளியை
பரப்ப
சப்தம்
அடங்கியது நிசப்தமாய்...
இருளணைத்து
இமைகள் இணைய
காதுக்குள் மீண்டும்
அதே க்ரக் க்ரக் க்ரக்...
ஒன்றுக்கு
இரண்டாய்
விளக்குகளை
எரியவிட்டு
மின்
விசிறி நிறுத்தி
மிக
உன்னிப்பாய்
சுவர்
ஓரம்
நாட்காட்டி
பின்புறம்
கட்டிலின்
அடியில்
கொடித்துணியில்
பக்கத்தில்
என
நாற்புறமும் நோட்டம் விட்டு
சத்தம்
அடக்கிய அச் சத்தத்தை
தேடித்
தேடி அலுத்து
ஓய்ந்துபோய்
அமர்ந்த நேரம்...
மெள்ளமாய்
மிக
மெல்லமாய் க்ரீச்சிட்டு
தலை
காட்டியது
பூச்சியும்
அல்லாத
சிறு பறவையிலும் சேராத
ச்சே!!!
உனக்குத்தானா இத்தனை பயந்தேன்
என
நானும்
அதே
ஏளனப் பார்வையுடன் அதுவும்
விடியல்
விளிம்பைத்
தொடும் நேரம்
உறங்கச்
சென்றோம்
கட்டில்
மீது நானும்
கட்டில்
அடியில் அதுவும்...
Subscribe to:
Posts (Atom)