skip to main |
skip to sidebar
மெட்டமைக்கிறாய்...
அடர் மழைக்குப் பின்னான
தூவானப் பொழுதொன்றில்
ஒற்றைக் கோட்டுப்பாதையில்
துணை தேடிய பறவை ஒன்றின்
அத்துவானக் குரலில்
வழிந்தொழுகும் விரகத்தை
கைகளில் ஏந்தியபடி
நனைந்த புல் நுனிகள்
பாதச்சூட்டை உணர்ந்துருக
இதழ் வெடிப்பில் கசிகின்ற
என் வரிகளுக்கு
கைக்கெட்டா தூரத்தில்
மெட்டமைக்கிறாய் நீ
2 comments:
அழகிய மெட்டுடன் அற்புதமான கவிதை.;) பாராட்டுக்கள்.
நன்றி வை.கோ சார்
Post a Comment