Friday, October 30, 2015

வருத்தம்...

ஒவ்வொரு முறை நீ
சுகவீனப்படும் பொழுதும்
சொல்லமுடியாத
வார்த்தைகள்
தொண்டையில் சிக்கிய
விக்கலாய்
தவித்துப் போகின்றன
ஆற்றுதலின்றி…


3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

’உண்மையான வருத்தம்’ இப்படித்தான் தவிக்க வைக்கும் !

{ கடைசி வார்த்தையில் ‘ற்’ என்ற எழுத்து தேவையோ ? }

SOS said...

நன்றி வை.கோ சார். ஆற்றுவார் இல்லாமல்னு சொல்லுவோம் இல்லையா அந்த வார்த்தையின் பொருள் படும்படி ஆற்றுதல் இன்றி என எழுதியுள்ளேன். ஆறுதல் என்ற பொருளில் அல்ல. தவறாக இருந்தால் கூறவும். மாற்றிவிடுகிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//SOS said...
நன்றி வை.கோ சார். ஆற்றுவார் இல்லாமல்னு சொல்லுவோம் இல்லையா அந்த வார்த்தையின் பொருள் படும்படி ஆற்றுதல் இன்றி என எழுதியுள்ளேன். ஆறுதல் என்ற பொருளில் அல்ல. தவறாக இருந்தால் கூறவும். மாற்றிவிடுகிறேன். //

அது அப்படியே இருக்கட்டும். மாற்ற வேண்டாம். தங்களின் இந்த விளக்கம் எனக்கும் ’ஆறுதல்’ அளிப்பதாகவே உள்ளது. :))))) மிக்க நன்றி.