நம்மை
சிறகடிக்க வைக்கிறது
சிறிய
விஷயம் தான்!!
நெஞ்சை
சிதறடிகவும் செய்கிறது
சிறிய
விஷயம் தான்!
அழகான
சுவடாய் இதயத்தில் பதிகிறது
சிறிய
விஷயம் தான்!!
அழியாத
சோகமாய் மனதில் படிகிறது
சிறிய
விஷயம் தான்!
புன்னகையை உயிர்ப்பிக்கிறது
சிறிய
விஷயம் தான்!!
தீராத
ரணத்தை பரிசளிக்கிறது
சிறிய
விஷயம் தான்!
சுமைகளை
சுகமாக்குகிறது
சிறிய
விஷயம் தான்!!
அன்பைக்
கீரிப் போகிறது
சிறிய
விஷயம் என்பதெல்லாம்
உண்மையில்
சிறிய
விஷயமே அல்ல!!!...
3 comments:
சிறிய சிறிய சந்தோசம் தான் தேவை என்பது போல...
தொடர வாழ்த்துக்கள்...
சிறிய விஷயம்தான் எனச்சொல்லி சிறப்பான ஆக்கம் தந்துள்ளதும்
சிறிய விஷயமே அல்ல!!!... ;)))))
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
தொடர்ந்த ஊக்கங்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி திரு.தனபாலன் மற்றும் VGK சார்.
Post a Comment