Wednesday, November 9, 2016

ரசனை...

முகநூலில் வெளிநாட்டுக் குழந்தை ஒன்று
தூங்கிவிழுந்து கொண்டே
முகமெங்கும் ஐஸ்க்ரீமை
ஈஷிக்கொண்டு சாப்பிjடுவதை
ரசித்த  லட்சுமி
பட்டென்று தன் ஒன்றரை வயது
மகனின் முதுகில் வைத்தாள்
அடி ஒன்றை
பருப்பு சாதத்தை வாயில் போடாமல்
கன்னத்தில் அப்பிக் கொண்டிருந்ததால்…

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

எங்கோ கவனம் .... ஆனால் பாவம் .... இங்கு அடி !

ரசனையுடன் கூடிய ஆக்கம். பகிர்வுக்கு நன்றிகள்.

SOS said...

அடடே! V.G.K sir ரொம்ப நாளாச்சே உங்க பதிவைப் பார்த்து. நலம்தானே சார்? மறுபடியும் உங்கள் உற்சாகமூட்டும் கருத்தை பதிந்தமைக்கு நன்றிகள் சார்.