Wednesday, November 9, 2016

கவனம்...

உன் வார்த்தைகள் என்ன
திருவிழாக்கூட்டமா?
பேசிக்கொண்டிருக்கும் போதே
தொலைகிறேன்!..
ஆனால்
நான் தொலையக் கூடாது
என்பதில் நீ மிகக் கவனமாகவே
இருக்கிறாய்
அளந்தே பேசுவதால்..

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

’கவனம்’ என்ற தலைப்பாக
உள்ளதால் மிகவும் கவனமாகப்
படித்தால் தான் புரிந்துகொள்ள முடிகிறது.

பகிர்வுக்கு நன்றிகள்.

SOS said...

ஹா!ஹா! ஹா! கவனமாகப் படித்து கருத்திட்டதுக்கு நன்றி சார்.