உயிர் சுமக்கும் உடலுக்கு உண்டு
ஜனனமும் மரணமும்
உன் நினைவு சுமக்கும் உணர்வுக்கு உண்டோ?...
பாசி படர்ந்த இதயக் குளத்தில்
வசீகரத் தாமரை உன் நினைவு
உனக்கான என் வரிகள் ஒவ்வொன்றும்
பாசி விலக்கி உனைச் சேரவே முயல்கின்றன..
விரல்களிலிருந்து விழும் முன்னமே
உன் விழிகளில் படிந்திடவிழைகின்றன...
என் கண் பேசும் கவிதைகளுக்கும்
உன் இதழ் உணர்த்தும் பாடங்களுக்கும்
உவமை தேடியே பிணைகிறது நம் விரல்கள்...
உன் வரவால் என் வாழ்வின்
ஒவ்வொரு நாட்களும் தூசி தட்டப் படுகிறது
ஒவ்வொரு நொடியும் வர்ணம் ஏற்றப் படுகிறது
வளைந்து செல்லும் நதியின் வசீகரம் போல
உன் நினைவு சேகரித்த
வார்த்தைகளுக்கு ருசி அதிகமாகிறது
நிலவின் கிரணம் பூமியில் விழுவது போல்
ஓசையேதும் இன்றி விழுந்தது
என்னுள் உன் காதல்...
உனைப் பார்க்கும் வேளை சிறு சொர்கம்
என் இதழோறச் சிரிப்பில்...
நீளும் ஆயுள் உன் விழியோற உயிர்ப்பில்....
No comments:
Post a Comment