
நேற்று என் கையில் நீ
பத்துத் திங்கள் நான் செய்த
தவத்தின் பலனாய்
என்மடியில் விழுந்த
மழலைக் கவிதையாய்...
நேற்று என் மடியில் நீ
வயிற் நிரம்பிய மகிழ்வில்
என் முகம் பார்த்து
உன் இதழ்மலர்ந்து சிரித்த படி...
நேற்று என் தோளில் நீ
வெற்றிக் கோப்பை கையில் ஏந்தி
இதயம் முட்டிய பெருமிதத்துடன்...
நேற்று என் காலில் நீ
புருஷ லக்ஷண உத்தியோகத்துடன்
என் ஆசி பெறுவதற்காய்...
இன்று என் கையில் நீ
ஒரு பிடி சாம்பலாய்...
யாருக்கோ வைத்த குண்டில்
அன்னியமாய்ச் சிக்கி
அநியாயமாய் உயிர் விட்ட
அப்பாவி இளைஞனாய்
கருகிய என் குலக் கொழுந்தாய்....
யாரோ நடத்திய வன்முறையில்
வீழ்ந்தது என் தலைமுறை......
No comments:
Post a Comment