
வெற்றிகள் அதிசயங்கள் அல்ல
அவை முயற்சிகளின்
கிரீடங்கள்..
தோல்விகள் கேவலங்கள் அல்ல
அவை யாவும் வெற்றியின்
முதற்படிகள்...
தோல்விகள் அவமானம்
எனும் எண்ணத்தை
உன் மரபு அணுக்களிலிருந்து
வெட்டி எடு...
வாழ்க்கை அநேக
அதிசயங்களைத் தாங்கியுள்ளது
துன்பங்களை மட்டும் பிடித்துக் கொள்ளும்
பிடிவாதம் தவிர்...
கஷ்டப் பட்டுச் செய்வதை
இஷ்டப் பட்டுச் செய்து பார்
இலக்கு உனை நோக்கி நகரும்..
புலம்பல்கள் தவிர்த்து
புரிதல்கள் பழகு
மனம் வண்ணத்துப் பூச்சியாய்
சிறகடிக்கும்...
பணங்களைக் காட்டிலும்
மனங்களை நேசம் செய்
வாழ்தலின் சுவை கூடும்...
அச்சம் தவிர்
உன் வாழ்வு பிறர் வசமாகும் போது...
நாணம் தவிர்
நீ குழந்தையாய் மாறும் போது...
உண்மை தவிர்
மற்றவர் மனம் நோகும் போது...
எதிர் பாலரை மட்டுமல்ல
வாழ்வையும் காதலித்துப் பார்
சங்கடங்கள் தவிர்க்கப் படும்
சம்பவங்களில் சுவாரசியம் கூடும்....
4 comments:
வெற்றிப்படி எட்ட ஒவ்வொரு படியிலும் வைரக்கற்களாக அறிவுரை வரிகள் அத்தனையும் கைகளில் அள்ளிக்கொள்ள தோன்றும் சிறப்பான வரிகள் ஹேமா...
வெற்றிக்கு முதல் படி முயற்சி அதையும் இஷ்டத்துடன் செய் ஈடுபாட்டுடன் செய் நம்பிக்கையுடன் செய் என்று ஊக்கம் தரும் வரிகளால் கவிதை வரைந்த அன்பு ஹேமாக்கு என் அன்பு வாழ்த்துகள்....
Wonderful kavaidhai
RAM
Thanks Manju akka.
Thanks Sriram.
மிக அருமையான வலிமையான வரிகள் தன்னம்பிக்கை ஊட்டுகின்றன. நன்றி.
Post a Comment