
வெற்றுத் தொடுதல் மட்டுமல்ல
ஸ்பரிஸம்
ஒரு மந்திரம்...
உணர்வுகளின் யாகம்
தாய்மையின் ஸ்பரிஸம்
குழந்தையின் ஸ்பரிஸம்
சகோதர ஸ்பரிஸம்
நட்பின் ஸ்பரிஸம்
காதலின் ஸ்பரிஸம்
ஒவ்வொன்றும் தனித்துவமான
உணர்வுகளால் உச்சரிக்கப்படும்
உள் அதிர்ந்து உயிர் தொடும்
மந்திரம்...
ஸ்பரிஸம் எனும் புனிதம்
தவறான உச்சரிப்பில் தடம்மாறி
வக்கிரப் படும் பொழுது
முரண்கள் பிறழும்
உண்மைகள் ஒப்பனைக்குத் தயாராகும்
முடியும் முன்னே திரைமூட வைக்கும்
ஸ்பரிஸங்கள்
கொச்சையாக அல்ல
கவனமாக
உணர்த்தப்பட வேண்டியவை..
2 comments:
ஸ்பரிசங்களின் உன்னதத்தை எத்தனை அழகா வடிச்சிருக்கேப்பா... ஸ்பரிசங்கள் சற்றே மாறி வக்கிரங்கள் மனதின் உள் புகுந்துவிட்டால் அகத்தின் தூய்மை இங்கே உமிழப்பட்டுவிடும்...
அழகிய வரிகளில் செதுக்கிய சிந்தனைக்கவிதை ஹேமா...
அன்பு வாழ்த்துகள்...
Thank you Manju akka for your nice words.
Post a Comment