Thursday, September 15, 2011
மிஸ்டர்.பொது ஜனம்.....
செய்தித்தாள் மடித்துக் கொண்டே
“ அப்பப்பா எப்படி வெலவாசி
ஏறிக்கெடக்கு?...
சாமான் வெல ஏறிப்போச்சு?..
கறிகாய் வெல ஏறிபோச்சு?..
ச்சட்... இந்த பெட்ரோல் வெல
மாசா மாசம் ஏறி
நம்ம BP யும் இல்ல ஏத்துது?..
நாடு எங்க போயிட்டு இருக்கோ?..
மனுஷன் வாழறதா? வயித்த சுருக்கி சாவறதா?
யாருக்கும் அக்கறை இல்ல..
கொஞ்ச நாளாவது வண்டிகள எடுக்காம
பெட்ரோலும் வாங்காம
ஸ்டிரைக் பன்னனும்...”
புலம்பிக்கொண்டே எதையோ
தேடிக்கொண்டிருந்த
என்னவரிடம் கேட்டேன்..
என்னப்பா வேணும்?
எத தேடறீங்க?..
இல்ல.... பைக் சாவி எங்க வச்சேன்?
அடுத்த தெரு நாராயணன்
வீட்டுக்குப் போகனும்...
சரி... அந்த கார் சாவியாச்சும் கொடு..
என்றவரைப் பார்த்து
காற்றில் ஆடிய செய்தித்தாள்
சிரித்தது போலவா இருந்தது?!..
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
யாருக்கும் அக்கறை இல்ல..
கொஞ்ச நாளாவது வண்டிகள எடுக்காம
பெட்ரோலும் வாங்காம
ஸ்டிரைக் பன்னனும்...”//
இப்படி சொல்லி புலம்பிவிட்டு அடுத்ததெரு நண்பர் வீட்டுக்கு, வண்டி, காரில் போக நினைப்பது சிரிப்பை உங்களுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் வரவழைத்து விட்டது.
பொதுஜனம் அப்படி பழகி விட்டது நடையை மறந்து நாட்கள் ஆகி விட்டது. பக்கத்தில் இருக்கும் இடத்திற்கும் வாகனங்கள் வேண்டும்.
கவிதை நன்றாக இருக்கிறது.
காற்றில் ஆடிய செய்தித்தாள்
சிரித்தது போலவா இருந்தது?!..
"மிஸ்டர்.பொது ஜனம்....."
நன்றி கோமதி அரசு அவர்களே மற்றும் இராஜேஸ்வரி அவர்களே...
Post a Comment