
எப்போதோ படித்த புத்தகத்தை
சும்மா இருக்கையில்
புரட்டியது போல...
மனதாழத்தில் புதைந்திருந்த வரிகள்
மேலெழுந்து வந்தது போல...
என்றோ என் ஆழ்மனதால்
உருவகிக்கப்பட்ட நீ
இன்று மேகமென
மிதந்து வந்தாய்...
மீள் வாசிப்பின் சுகத்தை
உனை நேசிக்கையில்
உணரவைத்தாய்...
புத்தகமும் நீயும் ஒன்று
எப்போதும் நினைவடுக்குகளில் மட்டும்
சஞ்சாரம் செய்வதால்..
அதன் வரிகளும் நீயும் ஒன்று
எப்போதும் எனை மீட்டுச் செல்வதால்
என்றும் நான் உனது வாசகியாய்
கற்பனை எல்லைகளைக்
கனவுகளில் மட்டும்
கடந்து செல்பவளாய்...
1 comment:
அனைத்து வரிகளும் அற்புதம் அதுவும் கடைசி நான்கு வரிகள் மிகவும் அருமையானது. மனதிற்குள் எழும் எண்ணங்களின் பிரதிபலிப்பாக உள்ளது. நன்றி அழகான வரிகளுக்கு.
Post a Comment