பழைய வார இதழ் ஒன்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அதில் சென்னையில் நடந்துவரும் நைட் க்ளப்புகளைப் பற்றியும் பெண்களின் கணிசமான வரவு பற்றியும் எழுதியிருந்தது. அதைத் தொடர்ந்த சில தினங்களிலேயே மேலும் அது பற்றிய மனதுக்கு ஒவ்வாத விஷயங்களையும் கேள்விப்பட நேர்ந்தது. அதன் விளைவே இவ் வரிகள்....
பாருக்குள்ளே...
நரபலிக் கூட்டத்தில் சுய பலியாகும்
சுயம்பு இரைகள்
நைட் க்ளப்பில் பெண்கள்...
பாருக்குள்ளே நல்ல நாடு
பாடிய பாரதியே இன்று நீ சற்றே
(BAR) பாருக்குள்ளே வந்து பாரு
போராடிப் பெற்றோம் சற்றே
அதிக கால் சதவிகிதம் 33%
வெளியில்
சுதந்திரமாய் அனுமதி
முதல் பாதி நிறைத்த
88% உள்ளே நிழலில்
முக்கால் நிர்வாணத்தில்
திருமணம் முன் குழந்தை
கலாச்சார சீர்கேடு _ தடுப்பு
கருச்சிதைவு மருத்துவத்தில்
பெற்றெடுத்தால் தானே பிரச்சனை..
படிப்பதென்னவோ " அக்னிச் சிறகுகளும்"
"அகதா க்றிஸ்டியும்"
கண்ணாடி அலமாரியின்
அலங்கார அணிவகுப்பில்
இடிப்பதென்னவோ மிட் நைட் மசாலாவும்
சிந்து சமவெளியும்..
அலங்காரத் திரைக்குப் பின்னே
அழுக்கு நாடகங்கள்...
எங்கெங்கு காணிணும் சக்தியடா
அந்த சக்தி இழக்குது இங்கே புத்தியைடா...
பாருக்குள்ளே நல்ல நாடு
பாடிய பாரதியே இன்று
நீ வந்து பாரு....
Sunday, February 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment