
காலன் போல மெல்ல நகர்கிறது
இப் பகல்
மரணம் போல சட்டென்று
ஆட்கொள்கிறது இரவு...
இருளின் அகண்ட மௌனத்தில்
ஆரம்பித்துவிடுகிறது உன் பிம்பங்களின்
ஒளி இரைச்சல்கள்...
பழைய தொடுதல்களினூடே
புதிய கதை எழுதி நகர்கின்றன
உன் விரல்கள்...
புதிரைப் போல சிதறிக்கிடக்கும்
உன் விரல் உதிர்த்த சொற்களை
வரிசைப் படுத்தி
வாக்கியமாக்குவதற்குள்ளாகவே...
அடுத்த கதையை
எழுதத் தொடங்கிவிடுகிறாய் நீ...
2 comments:
வித்தியாசமான சூழலில் ஒளி (!) இரைச்சல் கேட்டிருக்கும் போது ஆச்சர்யம் தான் மேலிடுகின்றது.
விரல்கள் உதிர்கள் சொற்களை வாக்கியமாக்கும் வேலையிலே நாம் பின் தங்கி விட்டோமோ(மே) என்று யோசிக்க வைத்து துள்ளெழுப்பும் வரிகள்.
நன்றி
நன்றி சிவா.. வருகைக்கும் பகிர்வுக்கும்
Post a Comment