
அம்மா என்ற சொல்லில்
அன்பை உணர்ந்தேன்!
அப்பா என்ற சொல்லில்
கடமை உணர்ந்தேன்!
அக்கா என்ற சொல்லில்
செல்லம் உணர்ந்தேன்!
அண்ணா என்ற சொல்லில்
அக்கறை உணர்ந்தேன்!
தம்பி என்ற சொல்லில்
குறும்பை உணர்ந்தேன்!
தங்கை என்ற சொல்லில்
நேசம் உணர்ந்தேன்!
ஆசான் என்ற சொல்லில்
கண்டிப்பை உணர்ந்தேன்!
கணவன் என்ற சொல்லில்
காதல் உணர்ந்தேன்!
மழலை என்ற சொல்லில்
பாசம் உணர்ந்தேன்!
உன் நட்பு என்ற
ஒற்றைச் சொல்லில்
அத்தனையும் முழுதாய்
உணர்ந்தேன்...
1 comment:
நட்பிலே உன்னதமான கருத்திருப்பினும் தாய், தந்தை உறவுகளை விட மேலோங்கியிருக்கும் என்ற வரிகள் என்னில்(னக்குள்) மட்டும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லையே!
Post a Comment