Sunday, April 8, 2012
கொஞ்சம் காதலும்.. கொஞ்சக் காதலும்...
1. என்ன இது?!...
எந்தச் சாலையில் நான் நடந்தாலும்
உன் இருப்பிடத்திற்கே
கொண்டுவிடுகின்றதே?..
2. என் தனிமைக் கதவின்
தாழ் நீக்கிவிட்டு
உன் இதயச் சிறையில் எனைப்
பூட்டிவிட்டாயே?
3. வேதனைக் கூட்டிடும் மாலையில்
சோதனையாக உன்
நினைவு...
4. இது என்ன?!..
என் இதழ்களைச் சுற்றி
தேனீக்கள்?
ஓ!.. சற்றுமுன் நீ
முத்தமிட்டுச் சென்றாயோ!?..
5. எத்தனை முறை கடலாய் மாறி
நீ எனைக் கொண்டாலும்
உன் நினைவுகளால் குளிர்ந்து
மழையாகி மீண்டும் உனையே அடைகிறேன்..
6. தேனாகி பெயர் தெரியாததொரு
அழகிய பூவில் நான்
மறைந்திருக்கிறேன்
முடிந்தால் வண்டாகி மிகச் சரியாக
எனைத் தேடி எடுத்துக்கொள்...
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
6 குறுங்கவிதைகளும் ஆறு விதத்தில் அன்பை வெளிப்படுத்துகின்றது என்பதே காவியத்தின் உச்சம், கரு.
பகிர்ந்தமைக்கு நன்றி
Thank you sivahari..
Post a Comment