என் பழைய டயரிலிருந்து.
என் முதல் குழந்தை உருவானபோது ஒவ்வொரு நிலையிலும் தோன்றியதை எழுதி வைத்த வரிகள்.
தாய்மை: (முதல் மூன்று மாதங்களில்)
உயிரில் உயிர் எழுதும் உறவு
உயிரில் உயிர் உருகும் உணர்வு
உயிரால் உயிர் வடிக்கும் ஓவியம்
உயிர் கொண்டு உயிர் எழுதும் காவியம்
கருவரைக் குழந்தை: (இரண்டாம் மூன்று மாதங்களில்)
ப்ரம்ம உளி கொண்டு மயன்
என் கருவரையில் தங்க நிலவை
செதுக்கத் தொடங்கிவிட்டான்
பிரசவம்: (கடைசி மூன்று மாதங்களில்)
வண்ண வண்ண இதழ்களை விரித்து
ஒரு மொட்டு மென்மையாய் மலரப் போகிறது
மேகத் திரைக்குள் மறைந்திருந்த தங்க நிலா
வானத்து அரங்கில் அரங்கேறப் போகிறது..
குழந்தை : (பிறந்த சில நாட்களில் எழுதியது)
வசந்தகாலம் வேனிற்காலம்
மழைக்காலம் குளிர்காலம்
இத்தனை பருவமாற்றங்களும் ஒரே நாளிலா!
அட! என் அருகில் என் குழந்தை....
Friday, June 3, 2011
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அட .
எனக்கும் கூட
தாய்மை உணர்வு
வந்தது எப்படி ?
- உங்கள் கவிதை.
தாய்மை ஆண்களுக்கும் உரித்தானதொரு உணர்வுதான். வருகை தந்ததற்கும் பாராட்டுகளுக்கும் மிக நன்றி சிவகுமரன்.
வரிகள் சொல்லும் வார்ப்புகள் என்றும் எண்ணிடக் குறையாதொரு இன்பத்தை தாய்மை வழியே காண இயலுகின்றது.
உணர்ந்து எழுதிய வரிகள் அனைத்துமே உன்னதமானவை.!
கருவறை கவனிக்கத் தக்கது.
Post a Comment