Friday, November 4, 2011
தொடரட்டும் இனியும்...
உனைப்பற்றிய படிமங்களை
சற்றே உரசிப் பார்த்தேன்..
ஒரு ஓவியம் போல்
மனதில் வழிந்திருக்கிறாய்
ஒரு சிற்பம் போல
நெஞ்சில் நிறைந்திருக்கிறாய்
காதல் செய்து இதயத்தில்
கசிந்திருக்கிறாய்
புகை போல என்னுடல்
தீண்டியிருக்கிறாய்...
எனக்குப் பிடித்த பலவும்
உனக்கும் பிடித்திருக்கிறது
மழை மண்ணின் வாசம்,
மிளகாயின் நெடி
பட்டாசுப் புகை
வைரமுத்து கவிதைகள்
மழைக்கால இரவுகள்
இளஞ்சூரிய விடியல்கள்
குளிர்காலத் தூக்கம்
நீண்டதொரு ரயில் பயணம்
பூரி சட்டினி
சூடான ஃபில்டர் காபி
இப்படி எத்தனையோ....
ஒத்திருந்தாயோ?
ஒத்திருப்பது போலிருந்தாயோ?!...
அந்நம்பிக்கையில் எந்த ஆணியும்
அறைந்ததில்லை நான்
இதுவரை..
நீயும் நானும் இந்தக் கவிதையும் போல
சொல்லிவிட்ட வார்த்தைகளுடனும்
சொல்ல மறந்த நினைவுகளுடனும்
தொடரட்டும் இனி வரும் காலமும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment