
போர்க்குற்றங்கள் ஆக்கிரமிப்புகள்
அத்துமீறல்கள் குண்டுமழைகள்
துரோகங்கள் படுகொலைகள்..
தாள் முழுவதும்
எங்களின் நாள் முழுவதும்
எத்தனை எத்தனை நம்பிக்கைச் சிதறும்
அவலக் கோலங்கள்..
ஏ!?... ஈசனே...
எதற்காக எம் குலம் படைத்தாய்?
எதைக்காக்க எம்மறிவு வளர்த்தாய்?
ஏனிப்படி எம்மினம் அழிக்கிறாய்?
பொங்கியெழுந்த கேள்விகளுக்கு
இடையே என் அலைபேசியில்
மின்னியது ஒரு குறுஞ்செய்தி..
பெண்ணே!..
சற்றே பொறுத்திரு..
இந்நொடி நான் இமயமலை உச்சியின்
ஓரத்தே ஒரு பதுங்கு குழியில்
என்னைக் கடக்கும் இப்போர் விமானம்
குண்டு பொழியாமல் இருந்தால்
அடுத்த நொடி உன் கேள்விகளுக்கு
பதிலளிக்கிறேன்...
இப்படிக்கு
-நான் கடவுள்
No comments:
Post a Comment