Saturday, May 28, 2011

உனக்கென....















மழையில் நனைந்து மேனி தழுவிய
தென்றல் போல
எனைத் தழுவிச் சென்றாய்...

கனவுகளில் திரியும்
ஒற்றை மேகமாய்
நிலத்தில் தொடரும்
ஒற்றை நிழலாய்
நினைவுகளில் எப்போதும் நீ - சிலீரென்று

உன் சுவாசங்கள் சுடுகின்ற தூரத்தில்
இருந்து கொண்டே
என் சுவாசங்களை திருடிச் சென்றாய்

கடலில் கலந்த மழைத் துளியைத்
தேடுவது போல்

உன்னுள் தொலைந்த
என்னைத் தெடிக்கொண்டிருக்கிறேன்

விதையைப் போல காதலை என்னில்
தூவிச் சென்றாய்

உனக்கென மலர்கள் சுமந்து
தவமிருக்கிறேன் நான்

புன்னகையில் கரைகின்ற
கண்ணீர்த் துளிகளுடன்...

4 comments:

Udayakumar Sree said...

"தமிழ் இனி மெல்லச்சாகும்!" எந்த மடையன்(ர்) சொன்னது. May be ஹேமாவைப்பற்றி தெரியாமல் சொல்லிவிட்டான்(ர்).

SOS said...

நண்பரே என்ன சொல்ல வருகிறீர்கள்?. தமிழ் மெல்லச் சாகாது இதை படித்த... உடனே சாகும் என்கிறீர்களோ? குழப்பமாய் உள்ளதே தங்களின் பின்னூட்டம்?!...

Udayakumar Sree said...

தமிழ் எப்போதுமே சாகாது என்பதைத்தான் அப்படி சொன்னேன். வலைகளில் எழுதும் பலர் தமிழை கொன்று குவித்துக்கொண்டிருக்கும் வேளையில் உங்கள் கவிதைகளில் பயன்படுத்திய சொல்லாடல்களில் தமிழ் மீண்டு உயிர் பெற்றுவிட்டது. உங்கள் தமிழ் வாழ்க..வளர்க..

SOS said...

ஓ!அப்படியா? எனக்கும் தமிழில் மிக புலமை எல்லாம் கிடையாது. தோன்றியதை எழுதிக் கொண்டிருக்கிறேன். அவ்வளவே. கருத்துக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி உதயகுமார் அவர்களே..